×

வெயில் காலத்தில் அசைவம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 

பொதுவாக சிலருக்கு எல்லா நாட்களிலும் அசைவ உணவு தேவை .இந்த சம்மரில் ஓவரா அசைவம் சாப்பிட்டால் என்னாகும்னு இப்பதிவில் பார்க்கலாம்
1. வெயில் காலங்களில் சிலர் வெளியில் நன்கு நடமாடி விட்டு வீட்டிற்கு வந்த உடனே குளிர் சாதன பெட்டியில் இருக்கும் குளிர்ந்த நீரை உடனே குடிக்கும் வாடிக்கை கொண்டிருக்கின்றனர்.
2.இது உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற ஒரு செயலாகும். அதற்கு மாறாக மண்பானை தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மை ஏற்படுத்தும்.
3.கடுமையான வெயில் அடிக்கின்ற அக்னி நட்சத்திர காலத்தில் வியர்வை அதிகம் ஏற்படுவதால் உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது. இது உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும். சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
4.எனவே இக்காலங்களில் அடிக்கடி பழங்கள் சாப்பிடுவது, சுத்தமான நீரை அடிக்கடி அருந்துவதன் மூலம் உடலில் எப்போதும் நீர் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
5.கோடைக்காலங்களில் காரம், புளிப்பு போன்றவை அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளையும், மாமிச உணவுகளையும், மாவுச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


6.இத்தகைய உணவுகள் வெயில் காலங்களில் பலருக்கு செரிமானமின்மை, மலச்சிக்கல் மற்றும் இன்ன பிற வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.
7.நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள், உணவுகளை கோடைகாலங்களில் அதிகம் சாப்பிட வேண்டும்.
8. கோடைக் காலங்களில் பகல் நேரத்தில் இருக்கும் வெப்பம் உடலை சூடு படுத்துவதோடு, இரவிலும் நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்வதால் உடல் மேலும் உஷ்ணமடைந்து பல நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.