×

பெண்கள்  மாதவிடாய் நாட்களில் ஆரோக்கியமாய் இருக்க கடை பிடிக்க வேண்டிய வழிகள்

 

பொதுவாக சிலரோ அதிக ரத்த போக்கைமாதவிடாய் நாட்களில் சந்தித்து அதிக சோர்வை சந்திக்கின்றனர் .
இந்நிலையில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான சுகாதார விஷயங்களை பற்றி இந்த பதிவில் கூறுகிறோம் .  
1.இந்த நேரத்தில் உங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். 4-6 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்களை மாற்றி கொண்டே இருக்க வேண்டும்.
2.இதை செய்ய தவறினால் சிறுநீர் தொற்று மற்றும் எரிச்சல் பிரச்சனை அதிகரிக்கும்.


3.மாதவிடாய் காலங்களில்  முடிந்தவரை உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். 4.பிறப்புறுப்பை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்துக்கொள்ள வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம்.
5.அழுக்கு படர்ந்த உள்ளாடைகளால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.  இதுப்போன்ற நேரங்களில் காட்டன் உள்ளாடைகளை பயன்படுத்துங்கள்.
6.மாதவிடாய் காலங்களில் தினமும் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
7.தினமும் குளிப்பது உங்களை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் இந்த நேரத்தில் ஏற்படும் வயிறு வலி, முதுகுவலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.