×

நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடித்தால் எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?

 

பொதுவாக நந்தியா வட்ட பூ ,செடி ,இலைகள் வேர் என்று அனைத்தும் நமக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை .
இந்த பூவின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இதன் பூவை கண்ணில் கட்டி வந்தால் கண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உண்டு .கண்களில் எரிச்சல் ,கண்ணில் உஷ்ண கட்டிகள் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த நந்தியா வட்ட பூ தீர்வு கொடுக்கும்

2.நந்தியா வட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

3.நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
4.கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும்.
5.வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும்.
6.வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.