×

பலாச்சுளை மூலம் பறந்து செல்லும் நோய்கள் .

 

நம் மூதாதையர்கள் முக்கனிகளை  மா பலா வாழை என்று பட்டியலிட்டு நமது ஆரோக்கியத்துக்கு வழி சொன்னார்கள் .அந்த முக்கனிகளில் பலா பழத்தில்    ஏராளமான வைட்டமின்கள் மற்றும் நிறைய  தாதுக்கள் உள்ளன,.அத்துடன் அதற்குள் நிறைய நார்ச்சத்து உள்ளது.

தற்போது பலருக்கு அதிக மன அழுத்தம் மற்றும் வேலை சுமையால் விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் இந்த  பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரிக்க செய்கிறது .மேலும் , விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுத்து ஸ்கின்னை ஷைனிங் ஆக வைத்து கொண்டு இளமையோடு எப்போதும் இருக்கலாம் .

பலருக்கு சீக்கிரமே கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்ற பார்வை கோளாறுகள் ஏற்பட்டு விடுகிறது .அந்த மாதிரி நபர்கள் அப்படி  ஏற்படுவதைத் தடுக்க  பலாப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.இதில் உள்ள வைட்டமின் ஏ கண்ணுக்கு நன்மை செய்கிறது

 பலாப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைகிறது.

இதிலிருக்கும் சில மூலப்பொருட்கள் கேன்சர் செல்களை வளர விடாமல் செய்கிறது