×

கொசுக்களை விரட்ட சில குறுக்கு வழிகள்

 

பொதுவாக கொசுக்களுக்கு பிடிக்காத சில வாசனையுள்ள செடிகளை வளர்ப்பதன் மூலம் அவற்றை நிரந்தரமாக வீட்டை விட்டு விரட்டலாம் .அந்த செடிகள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.பூண்டு செடி வளர்ப்பதனால் அதில் உள்ள அடர்த்தியான நறுமணத்தினால் கொசுக்கள் நமது வீட்டிற்கு வராமல் இருக்கும்.
2.அதனால் சமையலில் பூண்டை சேர்த்து கொண்டாலும் அவைகள் அந்த வாசனைக்கு ஓடி விடும்
3.துளசி செடியை வளர்ப்பதன் மூலமும் கொசுக்களை விரட்டலாம்.துளசியின் வாசனை கொசுக்களுக்கு அலர்ஜி .


4.புதினாச் செடியின் வாசனைக்கு கொசுக்கள் நமது வீட்டை நெருங்க வாய்ப்பே இல்லை.
5.எனவே, புதினா செடியை வளர்த்து நோய் பரப்பும் கொசுக்களை பறந்தோட செய்யலாம்
6.லேவண்டர் செடியை அழகிற்காக அதிக இடங்களில் பயன்படுத்துவர்.
7.இந்த செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் இதில் உள்ள வாசனையில் கொசுக்கள் வீட்டிற்கு வராமல் தெருவிலேயே சுற்றி கொண்டிருக்கும் .
8.ரோஸ்மெரி செடியில் நல்ல வாசனை மற்றும் அழகான பூக்களும் உள்ளன. இந்த வாசனை கொசுக்களின் எதிரி என்றே கூறலாம்.
9.சாமந்தி பூவில் உள்ள வாசனைக்கு கொசுக்கள் வீட்டிற்கு வராது.எனவே அந்த பூவின் வாசனையை வீடு முழுவதும் பரப்பி கொசுக்களை ஓட செய்யலாம்