×

நோயில்லாமல் வாழ காய்கறிகளை எப்படி சாப்பிடவேண்டும் தெரியுமா ?

 

பொதுவாக பல காய்கறிகளை தோலுரித்த பிறகு, அவற்றில் உள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன,  எனவே எந்த காய்களை தோலுரிக்காமல் சாப்பிட்டால் என்ன நன்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1. சில நிபுணர்கள் தோலுரித்த நூக்கலை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது என்று கூறுகிறார்கள். எனவே நூக்கலை தோலோடு சமைக்க வேண்டும்.
2.வெள்ளரிக்காயை தோலுரித்தால், தோலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நீக்கப்பட்டு விடும்  அதன் தோலில் பல நொதிகள் காணப்படுகிறது, அவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்


3.சுரைக்காயில் பல்வேறு சத்துக்கள் இருப்பதாகவும், அவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை பயக்கும், ஆனால் அதை தோலுரிப்பதால் பல சத்துக்கள் அழிக்கப்படும் .  
4.பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் C போன்ற ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்து தான் பீட்ரூட் ஆகும். .  தோலுரித்த பீட்ரூட் சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும் . பீட்ரூட் தோலில் உள்ள சத்துக்கள் ஆனது நம்முடைய செரிமான சக்தியை சீராக வைக்கும்