×

ஒரு குழந்தைக்கு என்னென்ன விட்டமின் உணவுகள் அவசியம் தெரியுமா ?

 

பொதுவாக ஒரு குழந்தைக்கு    வைட்டமின் டி ,வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும் .மேலும் குழந்தைக்கு உணவை கொடுக்க வேண்டுமே தவிர கலோரிகளை கொடுக்க கூடாது
6 முதல் 12 மாத குழந்தைக்கு என்ன மாதிரியான உணவுகள் கொடுத்தால் குழந்தை ஆரோக்கியமாகவும் மூளை வளர்ச்சி சீராகவும் வளரும் என்று பார்க்கலாம்
1.
முருங்கைக்கீரையை நன்றாக வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்து வரலாம்
முருங்கைக்கீரையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் மூலம் உடலில் ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகும்.

2.
பச்சைப் பட்டாணியை நன்கு வேகவைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்து வரலாம்.
 இது எலும்புகளை வலுப்படுத்தும், பட்டாணியில் புரதச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் சதை வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படுகிறது.

3.
கேரட்டை வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்து வரலாம்
 இதை உணவில் அதிகமாக கொடுத்து வரலாம் கண்பார்வை மேம்படும் வேறு சில உடல்நல பிரச்சனைகளையும் தடுக்கும்.
4.
மாதுளை பழத்தை ஜூஸ் போட்டு குழந்தைகளுக்கு மதிய வேளையில் கொடுத்து வரலாம்.
இதனால் ரத்த உற்பத்தி அதிகமாகும்,நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகமாகும்.