சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
பச்சரிசி மாவு. :1 கப்
வெல்லம். : 1/2 கப்
பால். : 1/2 கப்
ஏலக்காய். : 3
நல்லெண்ணெய். : 2 டீஸ்பூன்
செய்முறை :
1.பச்சரிசி மாவில் ஒரு தேக்கரண்டியளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து அதில் நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
2. அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
3.பச்சரிசிமாவை சிறிய சிறிய உருண்டை யாக உருட்டி கொதிக்கும் நீரில் போடவும்.
4. தண்ணீர் கொதிக்கும் முன்பு உருண்டை களை போட்டால் கரைந்து விடும்.
5. கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டியளவு நல்லெண்ணெய் ஊற்றினால் உருண்டைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் வரும்.
6. உருண்டைகள் நன்றாக வெந்ததும் வெல்லத்தை கரைத்து வடிகட்டி ஊற்றவும்.
7. இதில் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
8. ஏலக்காய் தட்டி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
9. கருப்பட்டி மற்றும் சீனி சேர்த்து பண்ணலாம்.