×

143 புதிய  நிர்வாகிகளுக்கு  நியமன கடிதம்: ராமதாஸ் வழங்கினார்

 

பாமகவின்  அமைப்பு ரீதியிலான மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கான நியமனக் கடிதங்களை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழங்கி வருகிறார். 

 தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.   இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர்  ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், தலைமை நிலையச் செயலாளர்  இசக்கி படையாட்சி,  மாவட்ட செயலாளர்கள்   பாலசக்தி, மருத்துவர் க.ராஜா  மாவட்ட தலைவர் தங்கஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.

தைலாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழுப்புரம் மத்தி,  கள்ளக்குறிச்சி கிழக்கு  ஆகிய மாவட்டங்களில் பாமகவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 143  நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதங்களை  வழங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

புதிய நிர்வாகிகள் பாமகவின்  வளர்ச்சிக்காக   எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விளக்கிக் கூறினார். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

2024ம் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல், 2026ம் ஆண்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களை கருத்தில்கொண்டு கட்சியை பலப்படுத்த இப்போதில் இருந்தே பாமக  தன்னை தயார்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.