×

ஓபிஎஸ் வெடித்த 1910 வாலா சரவெடி
 

 

ஒரே நாளில் 1910 நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டி எடப்பாடி அணியை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் தனது அணியில் தொடர்ந்து மாவட்ட செயலாளர் மற்ற நிர்வாகிகள் நியமனம் குறித்து அறிவித்துக் கொண்டே  வருகிறார். அந்த வகையில் தான் தற்போது அதிரடியாக ஒரே நாளில் 1910 நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்.

 இனி எடப்பாடி அணியுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று ஆகிவிட்ட பின்னர் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.  அதுவும் குஜராத்தில் அமித்ஷா, நட்டாவை சந்தித்த பின்னர் இந்த ஜெட் வேகம் எடுத்திருக்கிறார்.  முன்பை விட நிர்வாகிகளை படு வேகத்தில் நியமனம் செய்து வருகிறார் . 

அண்மையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டினார்.  இதில் 88 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளை வைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.   இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக கட்சியின் சார்பு அணிக்கு  நிர்வாகிகளை நியமிக்க அப்போதே ஆலோசனை செய்திருந்தார்.   அதன்படி திருச்சி, வேலூர் ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, கிருஷ்ணகிரி என்று 6  மாவட்டங்களுக்கு 1910 நிர்வாகிகளை ஒரே நாளில் நியமனம் செய்திருக்கிறார். 

பன்னீர்செல்வத்தின் இந்த 1910 வாலா அதிரடி சரவெடியை பார்த்து பதற்றத்தில் இருக்கிறது பழனிச்சாமி தரப்பு.