×

நெசவாளர்களுடன் உணவருந்திய ராகுல்! வைரலாகும் வீடியோ!

மதுரையில் ஜல்லிக்கட்டை காண வந்தபோது, அங்கே பொதுமக்களுடன் அமர்ந்து பொங்கல் உணவை சாப்பிட்டார் ராகுல்காந்தி. தற்போது மூன்று நாள் பிரச்சார பயணமாக தமிழகம் வந்திருக்கும் ராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் ஓடாநிலை நெசவாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். ஈரோடு அருகே உள்ள ஓடாநிலையில் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார் ராகுல்காந்தி. பின்னர் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. நாளை விவசாயிகளுடன் அமர்ந்து மண் சட்டியில் சாப்பிடவிருக்கிறார் ராகுல். முன்னதாக அவர்
 

மதுரையில் ஜல்லிக்கட்டை காண வந்தபோது, அங்கே பொதுமக்களுடன் அமர்ந்து பொங்கல் உணவை சாப்பிட்டார் ராகுல்காந்தி. தற்போது மூன்று நாள் பிரச்சார பயணமாக தமிழகம் வந்திருக்கும் ராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் ஓடாநிலை நெசவாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

ஈரோடு அருகே உள்ள ஓடாநிலையில் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார் ராகுல்காந்தி. பின்னர் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

நாளை விவசாயிகளுடன் அமர்ந்து மண் சட்டியில் சாப்பிடவிருக்கிறார் ராகுல்.

முன்னதாக அவர் ஈரோட்டில், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசி பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “நான் எனது மனதின் குரலை பேச வரவில்லை, உங்களின் குரலை கேட்க வந்துள்ளேன்’’என்றார்.

மேலும், ‘’நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை. தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது. தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது’’என்றார்.

’’தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு. நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக இளைஞர்களின் பங்கு அளப்பரியது. தமிழகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும்’’என்றார் உறுதியாக.