×

உதயநிதி ஸ்டாலின் மீது 22 வழக்குகள் - இதை மறைத்து பொய் சொன்னது ஏன்?

 

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  அவர் மீது 22 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் இதை மறைத்து தேர்தல் வேட்புமனுவில் பொய் கூறியிருக்கிறார் என்றும்  புகார் கூறப்பட்டிருக்கிறது.

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் எம்.எல். ரவி,  அத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 அந்த மனுவில்,  ’’கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.  அவர் தேர்தல் வேட்பு மனுவில் தவறான பொய்யான தகவல்களை தெரிவித்திருந்தார்.  குறிப்பாக,  தனது வேட்பு மனுவோடு இணைத்து வழங்கும் படிவம் 26 இல் தன் மீது எந்த குற்ற வழக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். 

 அந்த தகவல் தவறானது.  உதயநிதி ஸ்டாலின் மீது 22 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.  அவர் வேட்புமனுவில் இதை மறைத்து வேட்பு மனுவில் பொய்யான தகவலை தெரிவித்து இருக்கிறார்.  இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்ப மனுக்கள் பரிசீலணையின் போது உதயநிதியின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என்று முறையிட்டேன் . ஆனால் எந்தப் பயனும் இல்லை.  அவரது மனுவை ஏற்றுக் கொண்டு விட்டார்.

 இந்த விதி மீறல் புகாரை புறம் தள்ளிவிட்டு உதயநிதி ஸ்டாலின் வேட்பமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.  அதனால் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை ஏற்றது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தவறானது . இதனால் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் பெற்ற வெற்றியும் முறைகேடானது.  ஆகவே அவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என கோரியிருக்கிறார்.