×

இதுவரை 220 பேர்! இனி ஓபிஎஸ், இபிஎஸ்க்கு சம்மன்

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது .     இனிமேல் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரமாக இருக்கும் இளங்கோவன் ஆகியோரிடம் விசாரணை நடத்த அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருக்கிறது என்று தகவல்.

 கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள செசன்ஸ்கோர்ட்டில் நடந்து வருகிறது.   நேற்று நடந்த இவ்வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் சயான்,  வாளையாறு மனோஜ் ஆஜராகிறார்கள்.  அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான்,  கனகராஜ் ஆஜராகிறார்கள்.  விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதால் வழக்கு நிலுவையில் இருக்கின்றன .

விசாரணை கால அவகாசம் தேவை என்று தெரிவித்தார் .  இதனை ஏற்ற வகையிலான கூட்டு நீதிபதி ஸ்ரீதரன் வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் .இதன்பின்னர் அரசு வழக்கறிஞர் சாஜகான் செய்தியாளர்களிடம் பேசியபோது தனிப்படை போலீசார் இதுவரைக்கும் 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி இருக்கின்றார்கள்.

 வழக்கு விசாரணை தற்போது முக்கிய கட்டத்திற்கு உள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில முக்கிய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்த இருக்கிறார்கள் என்று தெரிவித்தார் இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக இருக்கும் முன்னாள் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகிய மூன்று பேரிடமும் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட இருக்கிறது. 

 சசிகலாவிடம் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு நாள் விசாரணை நடந்து இருக்கிறது.   நீங்கள் யாரையாவது சந்தேகப்படுகிறார்களா? என்று சசிகலாவிடம் கேட்ட போலீசாருக்கு நீங்கள் தான் இதைச் சொல்லவேண்டும்.  நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.  மேலும் இந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் போலீசாரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதையடுத்து மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள் தனிப்படை போலீசார்.  திமுகவின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம்,  அதிமுகவின் இணைய ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலதுகரமாக இருக்கும் முன்னாள் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகிய மூன்று பேரிடமும் விசாரணை நடத்துவதற்காக விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட இருக்கிறது என்று தகவல்.