×

’’அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை!  ராகுலை பார்த்து மோடி அரசு ஏன் பயப்படுகிறது? ''

 

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனத்திற்கு  கைமாறியதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் நேற்று அமலாக்கத்துறை 9 விசாரணை நடத்தியது.  

நேஷனல் ஹெரால்டு வழக்கில் தற்போது ராகுலுக்கும் அடுத்ததாக சோனியாவும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதால்,  இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது .  

டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு தொண்டர்கள் பேரணியுடன் ஊர்வலமாக செல்வது என்று ராகுல்காந்தி முடிவு செய்திருந்தார்.  இதை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய டெல்லி முழுவதும் போலீசார் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.  4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் இந்த பேரணி தவிர்க்கப்பட்டது.   இதனால் ராகுல்காந்தி காலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று இங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.  அவருடன் ஒரே காரில் பிரியங்கா காந்தியும்  சென்றார்.

 முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் , ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் , சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகல் உள்ளிட்டோரும் பின் தொடர்ந்து காரில் சென்றனர். 

ராகுல் காந்தி காரில் ஏறி சென்ற பின்னர் காங்கிரஸ் தொண்டர்களும் நிர்வாகிகளும் தடையை மீறி அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முற்பட்டார்கள்.  அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.   சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூ பேஸ் பாகல்,  மல்லிகார்ஜுன கார்கே , மீனாட்சி நடராஜன்,  கே.சி. வேணுகோபால் , உள்ளிட்ட காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர் .  தலைவர்கள் டெல்லியில் உள்ள பதேபூர் பெயரில் துக்ளக் சாலை ,சரோஜினி நகர் ஆகிய காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.   டெல்லியில் காங்கிரசார் ஆங்காங்கே போராட்டத்தில் அமலாக்கத் துறைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதனால் காங்கிரசார் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர்.

 காலை 11 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு சென்றார் ராகுல்காந்தி .  இரண்டரை மணி நேர விசாரணைக்குப் பின்னர் மதியம் 2 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக விசாரணையில் நிறுத்தப்பட்டது.  அப்போது ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சோனியா காந்தியை சென்று சந்தித்தனர் . பின்னர் மதிய உணவை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி மீண்டும் மூன்று முப்பது மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார் .அதன் பின்னர் இரவு ஒன்பதரை மணி வரை விசாரணை நடந்தது

டெல்லியில் அமலாக்கத் துறைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் ஆங்காங்கே போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டிருந்த அவர்களை பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்தித்தார்.

 இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் பேசியபோது ,  டெல்லியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை மோடி அரசு அமல்படுத்தி இருக்கிறது.   நள்ளிரவில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.   ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தலைவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.   சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள் .  நாங்கள் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அமைதியாக ஊர்வலம் செல்ல விரும்பினோம்.   ராகுல் காந்தியையும் காங்கிரசையும் பார்த்து மோடி அரசு ஏன் பயப்படுகிறது?     காங்கிரஸ் அநீதிக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.