×

அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் இனி சம்பந்தமில்லை; அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்.... எடப்பாடி பழனிச்சாமியின் 40 பக்க பரபரப்பு கடிதம்

 

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில்  செல்வாக்கை இழந்து விட்டார்.   அவருடன் தகவல் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று  எடப்பாடி பழனிச்சாமி எழுதி இருக்க்கும் 40 பக்க கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

 அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஓ. பன்னீர்செல்வம் செல்வாக்கை இழந்துவிட்டார்.  அதனால் இனி அவருடன் எந்த தகவல் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டும்.  அவருக்கு ஆதரவாக யாரும் மனு கொடுத்தாலும் அவர்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்று தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக எடப்பாடி பழனிச்சாமி 40 பக்கம் கடிதம் எழுதி இருக்கிறார்.

 அந்த 40 வக்க கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமி சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.   அதிமுக பொதுக்குழுவிற்கு ஓ.  பன்னீர்செல்வம் தடை கேட்ட வழக்கு 11ஆம் தேதி காலையில் 9 மணிக்கு தீர்ப்பு வருகிறது.   இந்த நிலையில் அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் செல்வாக்கை இழந்துவிட்டார் என்று தேர்தலில் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருக்கிறார். 

 அந்த கடிதத்தில்,   அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொண்டர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுத்து வந்தார்.  தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற சுயநலத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களை துன்புறுத்தினார்.  அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கட்சி விரோத செயல்களாகவே இருந்தன.   கட்சியின் விதிகளை மீறுவதற்கு அவருக்கு தார்மீக உரிமையும் கிடையாது . 

முதலில் அவர் பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அது நடக்காமல் போனதால் போலீஸ் மூலம் பொதுக்குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தினார். அப்படியும் நடக்காமல் போனது.   உடனே  பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.  அதிலும் பலன் கிடைக்காமல் போனதால் தனது ஆதரவாளர்களை கட்சிக்கு எதிராக தூண்டி விட்டார் .  அவர்கள் மூலம் அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக செயல்பட வைத்தார் . இவை எல்லாமே அதிமுகவின் கட்சி விதிகளுக்கு எதிரான நடவடிக்கை.   சட்டவிரோத நடவடிக்கை.   இதற்காக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஐ தகுதி நீக்கம் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

 அதிமுகவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் தரப்படாததால் அந்த இரண்டு பதவிகளும் காலாவதியாகி விட்டன.   ஓ. பன்னீர்செல்வம் கட்சி விதிகளை கடைபிடிப்பதில் உண்மையானவராக இருந்திருந்தால் அவர் பொதுக்குழு கூட்டத்தில் காட்டியிருக்க வேண்டும்.  அதற்கு மாறாக 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று கோர்ட்டில் மனு கொடுத்தார்.   ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவருக்கு அவராகவே தடை விதித்துக் கொண்டிருக்கிறார் .   ஆனால் உண்மையை மறைத்து ஒருதலை பட்சமாக  பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார்.   அவரது கடிதம் கட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது.   அதனால் அதிமுக தொடர்பாக இனி அவரிடம் தேர்தல் ஆணையம் எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.   அதிமுகவினர் மத்தியில் அவர் செல்வாக்கை இழந்துவிட்டார்.  அதனால் அவரின் சார்பாக யாரும் மனு கொடுத்தாலும் அதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.