அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட மாட்டார்- ஜெயக்குமார்
அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட மாட்டார், உட்கட்சி விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையிடுவதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம் என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சட்டம் ஒழுங்கு சீர்க்கேட்டை தடுத்த நிறுத்த திமுக அரசுக்கு வக்கில்லை. விளம்பரத்துக்கு தான் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த விளம்பரங்களிலும் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் ஹீரோ போல ஸ்டாலினே நடித்து வருகிறார்” என விமர்சித்தார்.
28 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியிடம் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,
அதிமுக உட்கட்சி பிரச்சனையில் மூன்றாம் நபர் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம், அதை பிரதமர் மோடியும் விரும்ப மாட்டார் என தெரிவித்தார்.