×

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை நியமித்தார் ஓபிஎஸ்

 

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக  துணை ஒருங்கிணைப்பாளர்களாக ஜேசிடி பிரபாகர் ,கு.ப‌.கிருஷ்ணன்,மனோஜ் பாண்டியன்  ஆகியோரை  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். மேலும் 10 மாவட்ட செயலாளர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதன் அடிப்படை பதவில் இருந்து நீக்கி உள்ளார். அதன்படி,


1.பலராமன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்

2.எம் சி சம்பத்,கடலூர் வடக்கு  மாவட்ட செயலாளர்

3. இ ரா  ராஜேந்திரன்,கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்

4.பி.பாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரி மேற்கு மாவ்ட்ட செயலாளர்

5. உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்

6. ஆர் கே ரவிச்சந்திரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர்

7. கே டி ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்

8. சி. கிருஷ்ண முரளி, தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர்

9. கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர்

10.வி.எஸ். சேதுராமன், கழக வழக்கறிஞர் பிரிவு தலைவர்

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகின்றனர், புதிய பட்டியில் நாளை வெளியிடப்படும்” என தெரிவித்தார்.