×

விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் அதிமுக அமைச்சர்கள் கூட்டாக ஆலோசனை

 

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இரவு 8.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தார். முதலமைச்சர் ஸ்டாலின்,பிரதமரை வழியனுப்ப இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து விவிஐபி லவுஞ்சில் காத்திருந்தாா்.

இதையடுத்து இரவு 8.10 மணிக்கு  விமான நிலையம் வந்த பிரதமர் விவிஐபி லவுஞ்சின் மற்றொரு அறையில் அமா்ந்து   முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவைச் சேர்ந்த ஓபிஎஸ், இபிஎஸ், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் சுமார் 50 நிமிடங்களுக்கு மேலாக தனி அறையில் பிரதமருடன் ஆலோசனை நடத்தினார். 

இதனால்  பிரதமரை வழியனுப்ப வந்த கவர்னர், முதல்வர் இருவரும் காத்திருந்தனர். அதன் பின்பு இரவு 9.05 மணிக்கு பிரதமர் வெளியில் வந்தது  விமானத்தில் ஏற  சென்றபோது கவர்னரும் முதலமைச்சரும் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினார். அதன்பின்பு முதலமைச்சர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஆனால் கவர்னர் விமானம் டேக்கப் ஆகும்வரை காத்திருந்தாா். விமானம் இரவு 9.25 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றது. அதன்பின் ஆளுநர் வீடு திரும்பினார்