×

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி -  தீர்மானம் ரெடி!

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று தீர்மானம் தயார் செய்கிறது தீர்மானக் குழு.  

 நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு கூட இருக்கும் நிலையில் பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று பன்னீர்செல்வம் தரப்பு முயன்று வருகிறது.  ஆனால் பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்.  அந்த பொதுக்குழுவுக்கு பன்னீர்செல்வமும் உறுதியாக வருவார் என்று கட்சியின் சீனியர் கேபி முத்துசாமி தெரிவித்திருக்கிறார். பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்தை நேரில் பார்வையிட்டு பொதுக்குழு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் கேபி முனுசாமி.

 இந்த நிலையில் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தை பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,  தனது தலைமையின் கீழ் ஒற்றை தலைமையைக் கொண்டு வந்து விட வேண்டும் . பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமி  உத்தரவிட,   இன்று அதிமுக தலைமை கழகத்தில் கூடும் தீர்மான குழுவினர், அதிமுகவில் ஒற்றை தலைமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று தீர்மானத்தை வரைவு  செய்ய இருக்கிறார்கள் என்று தகவல்.

அதிமுகவில் தற்போது இரட்டை தலைமை இருப்பதால்தான்  கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று சொல்லி வருகிறார் சசிகலா.   எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆகிவிட்டால் சசிகலாவிற்கு இனி அந்த வாய்ப்பு இல்லவே இல்லை . அதன் பிறகும் அவர்   அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று சொல்லிவந்தால் சட்டப்படி அவர் மீது வழக்கு பாயும் என்கிறது அதிமுக வட்டாரம்.