×

உண்மையான முதல்வர் யார் என்பது இப்போது அனைவருக்கும் தெரியும்... ஏக்நாத் ஷிண்டேவை தாக்கிய ஆதித்யா தாக்கரே

 

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வசம் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்ளதை குறிப்பிட்டு, உண்மையான முதல்வர் யார் என்பது இப்போது அனைவருக்கும் தெரியும் என்று ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்கரேவை தாக்கினார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது அமைச்சரவையை கடந்த வாரம் விரிவாக்கம் செய்தார். ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவ சேனாவில் இருந்து 9 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். துணை  முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வசம் உள்துறை, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்ளன. இதனை குறிப்பிட்டு, உண்மையான முதல்வர் யார் என்று இப்போது அனைவருக்கும் தெரியும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ஆதித்யா தாக்கரே தாக்கினார்.


மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் வளாகத்தில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா எம்.எல்.ஏ.வான ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆதித்யா தாக்கரே கூறியதாவது: உண்மையான முதல்வர் யார் என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். சுயேட்சைகளுக்கு இடம் கிடைக்கவில்லை, பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை, மும்பையிலும் இல்லை. 

அவர்கள் (கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்) ஒரு அன்பான நபரை (உத்தவ் தாக்கரே) முதுகில் குத்தினார்கள். திரும்பி வர விரும்புவர்களுக்கு கதவுகள் திறந்திருக்கும், ஆனால் அங்கேயே இருக்க விரும்புபவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.