×

கடத்தப்பட்ட எம்எல்ஏக்கள்! பாத்ரூம் போறோன் என்று தப்பிவந்த எம்.எல்.ஏ.

 

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி பிடிக்காமல் சிவசேனா எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவோடு சென்ற சென்றுவிட்டதாக பாஜக ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்கள்.  ஆனால் எந்த எம்எல்ஏக்கள் அவர்களாக விருப்பப்பட்டு செல்லவில்லை.  விருந்துக்கு வாருங்கள் என்று அழைத்துச் சென்று காரில் ஏற்றி கடத்தப்பட்டு இருக்கிறார்கள் என்கிற விபரம்   அம்பலமாகியிருக்கிறது.  இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக சொல்லப்படும்  குற்றச்சாட்டு உறுதியாகிறது என்கிறார்கள் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள்.

 மகாராஷ்டிராவில் சட்டமேலவை தேர்தலில் வாக்களித்த பின்னர் முடிவுக்காக எம்எல்ஏக்கள் காத்திருந்து இருக்கிறார்கள்.   அப்போது அங்கு வந்த ஏக்நாத் ஷிண்டே  தானே பகுதியில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லி சிவசேனா எம்எல்ஏக்களை அழைத்துச் சென்றிருக்கிறார்.   மூன்று பெரிய கார்களில் சிவசேனா எம்எல்ஏக்கள் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள்.

கார்கள் நேராக  தானே  பகுதிக்கு செல்லாமல் குஜராத்தை நோக்கி  சென்றதால் எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.  தாங்கள் கடத்தப்படுகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.   எதற்கு குஜராத் செல்கிறீர்கள் என்று கேட்டபோது, முக்கியமான நபரை பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று  சொல்லியிருக்கிறார்.  காரில் சென்றபோது கார் சுங்கச்சாவடியில் நின்றதும்,  கைலாஷ் பாட்டில்  எம்.எல்.ஏ  கழிவறைக்கு செல்வதாக சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கி இருக்கிறார்.   பின்னர் அப்படியே தப்பித்து அங்கிருந்து  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து நிலைமையை விளக்கி இருக்கிறார்.

 இதையடுத்து கைலாஷ் பாட்டில் எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார் போது,   தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி பிடிக்காமல் ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்றுவிட்டார்கள் சிவசேனா எம்எல்ஏக்கள் என்று பாஜகவின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் உண்மையில் அவர்கள் விருந்துக்கு என்று சொல்லி கடத்தப்பட்டு இருக்கிறார்கள்.  அதில் தப்பி வந்த நானே சாட்சி என்று சொல்லியிருக்கிறார்.

 மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் அதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.