×

துரைக்கு எதிராக போர்க்கொடி! மதிமுகவில் இருந்து அதிருப்தி நிர்வாகிகள் அதிரடி நீக்கம்

 

இருபதுக்கும் மேற்பட்ட அதிருப்தி நிர்வாகிகள் மதிமுகவில் இருந்து இன்று நீக்கப்பட போகிறார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

 மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் இன்று கூடுகிறது வைகோ.  தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர்களாக ஆடுதுறை முருகன்,  ராஜேந்திரன்,   தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ , தணிக்கை குழு உறுப்பினராக சுப்பையா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.  

 இதில் துரை வைகோவுக்கு ஆதரவாளர்களாக உள்ள மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் மட்டும் பொதுக்குழுவில் பேச அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். தலைமை நிலைய செயலாளர் பதவியை துரைக்கு வழங்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் என்று 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

 சட்டத்திற்கு உட்பட்டு உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்.  மதிமுகவில் எந்த உழைப்பும் தராத தியாகம் செய்யாத துரை வைகோவை கட்சியில் சேர்த்து உயர்பதவி கொடுப்பதை நாங்கள் ஏற்கவில்லை என்ற கோஷத்தை அந்த மூத்த நிர்வாகிகள் எழுப்பியிருக்கிறார்கள்.   இதனால் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் அதிருப்தி நிர்வாகிகள் அவர்கள் அனைவரையும் கட்சி பதவிகள் மட்டுமன்றி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் துரை வைகோ வலியுறுத்தி இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.