×

எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கையா? கனிமொழி பதில்
 

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு கனிமொழி எம்பி பதிலளித்திருக்கிறார். 

 தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து 400 ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று நேரில் ஆய்வு செய்தார்.   அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

 மத்திய அரசு மூலமாக செயல்படுத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட் சிட்டி திட்டம் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலமாக பல்வேறு பகுதிகளில் இந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   இதுவரைக்கும்  அறுவது சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன.   மீது  உள்ள பணிகளையும் விரிவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த அவரிடம், 

 தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேள்விக்கு,   ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.   முதல்வர் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பார்த்துவிட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்.   இன்னும் சரியாக விசாரணை செய்துவிட்டு என்னென்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று சொன்னார்.

 அவரிடம் முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருவது குறித்து கேள்விக்கு,  பல தரப்பிலிருந்து வரக்கூடிய இந்த  கேள்வி நியாயமான கேள்விதான்.  முதல்வர் விசாரணை நடத்தி நடத்தி தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்.