×

நடிகர் சோனு சூட் வீட்டை விட்டு வெளியேற தடை

 

நடிகர் சோனு சூட்டின் காரை மடக்கிய அதிகாரிகள் அவரது காரை வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.    அதிகாரிகள் அவர் வீட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ளனர்.   வாக்கு மையத்திற்குள் நுழைய முயன்றதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

 பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது.   23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி  நடந்து வருகிறது.

 பஞ்சாப் சட்ட மன்றத் தேர்தலில் 1304 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.    தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகர் சோனு சூட்.   இவரின் சகோதரி மாளவிகா சூட்.   பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மொகா தொகுதியில் போட்டியிடுகிறார்.  

 வாக்குப்பதிவு மையம் ஒன்றில் நுழைய முற்பட்டு இருக்கிறார் சோனு சூட் .  இதை முன்னிட்டு காரில் வந்த அவரை மடக்கிய அதிகாரிகள் அவரை வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.    இந்த சம்பவத்தினால் சோனு சூட் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்க விடப்பட்டிருக்கிறது.  மொகா மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி பிரதீப் சிங் உத்தரவிட்டிருக்கிறார் .

ஆனாலும் அகாலிதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பல்வேறு வாக்குப்பதி மையங்களில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளன என எங்களுக்கு தெரிய வந்தது.  சில மையங்களில் பணம் வழங்கப்பட்டு இருக்கிறது.   தேர்தல் முறையாக நடைபெறுகிறதா என்று சோதனை செய்வதும் அதை உறுதி செய்வதும் எங்களுடைய கடமை. அதனால்தான் நாங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தது என்றும் கூறியுள்ளார் சோனு சூட்.  மேலும்,   இப்போது நாங்கள் வீட்டில் இருக்கிறோம். ஆனாலும் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.