×

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வை சமாஜ்வாடியால் மட்டுமே தோற்கடிக்க முடியும்.. அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

 

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வை சமாஜ்வாடியால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் 9வது மாநில மாநாடு  நடைபெற்றது. அந்த மாநாட்டை துவக்கி வைத்த அந்த கட்சியின் தலைவரும், அம்மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பேசுகையில் கூறியதாவது: இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி கடுமையாக உழைத்தது. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் (பா.ஜ.க.) ஒவ்வொரு தந்திரத்தையும் பயன்படுத்தி, அரசு நிர்வாக எந்திரத்தை தவறாக பயன்படுத்தினர் அதனால் நாம் வெற்றி பெறவில்லை. 

2019 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக சமாஜ்வாடிகள் ஒரு வரலாற்று முடிவை எடுத்தனர். பகுஜன் படைகளை ஒரே மேடையில் கொண்டு வர வேண்டும் என்ற ராம் மனோகர் லோஹியா மற்றும் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் கனவை நாம் முயற்சித்தோம். ஆனால் அதிகாரத்தில் இருந்தவர்கள் அதிகாரபூர்வ எந்திரத்தை (அரசு நிர்வாகத்தை) தவறாக பயன்படுத்தியதால் நாம் தோல்வியடைந்தோம். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணிக்கான தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாவிட்டாலும் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வை நமது கட்சியால் மட்டுமே முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற போராடும் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணி அமைத்தது. 2019 மற்றும் 2022ம் ஆண்டுகளில் சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும், நம் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பணியாற்றிய விதம் பார்க்கையில் என்னால் ஒன்று சொல்ல முடியும, .சமாஜ்வாடி வெற்றி பெறவில்லை என்றாலும், பா.ஜ.க.வுடன் போட்டியிட்டு அவர்களை தோற்கடிக்கக்கூடியவர்கள் யாராவது இருந்தால் அது நாம்தான் என்பதை சமாஜ்வாடிகள் அறிந்திருக்கிறார்கள் என்பதை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.