×

நான் சாதாரண ஆளுப்பா.. எல்லாம் அவர் தான்!

 

நான் சாதாரண  ஆளுப்பா.. எல்லாம் முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு சொன்னபோது செய்தியாளர்கள் சிரித்தனர்.

 திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல், தேனி மாவட்ட நகராட்சி நிர்வாக துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது . நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இந்த கூட்டத்தில் பங்கேற்றார். 

 கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது .  அப்போது செய்தியாளர்கள்,   பழனியை தனி மாவட்டமாக அறிவிப்பது பற்றிய கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு அமைச்சர் நேரு,    நான் சாதாரண ஆளுப்பா.. எல்லாம் முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.  அவர் சொன்னதை கேட்டு செய்தியாளர்கள் சிரித்தனர்.

 பின்னர் அமைச்சர் தொடர்ந்து பேசிய போது,  திண்டுக்கல் மாநகராட்சி நத்தம் ,வடமதுரை, தாடிக்கொம்பு ,அகரம், பாளையம் பேரூராட்சிகளில் காவிரி குடிநீர் திட்டத்தை மேம்படுத்த 133 கோடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.   நிலக்கோட்டை, வத்தலகுண்டு, ஆத்தூர் பகுதிகளின் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு 525 கோடி ரூபாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது,  ஓட்டன்சத்திரம் பகுதி ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட பணிக்கு 930 கோடி ரூபாயில் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது என்றார்.

 விவசாயிகளின் எதிர்ப்பால் அத்திட்டம் காவிரியில் இருந்து செயல்படுத்த ஆய்வு நடந்து வருகிறது என்றார்.