கேசவ விநாயகத்தின் கதையை முடிக்க சூர்யாவை பயன்படுத்தும் அண்ணாமலை - ராஜீவ்காந்தி
பாஜகவின் தேசிய செயலாளர் பி. எல். சந்தோஷ் . தமிழகத்தில் பாஜகவினர் மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதும், அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் எழும் புகார்கள் அனைத்திலும் பி. எல். சந்தோசுக்கு நேரடி தொடர்பு உண்டு என ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகிறார்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்று பிரபல வாரம் இருமுறை புலனாய்வு இதழில் செய்தி வெளிவந்திருக்கிறது.
இந்த நிலையில், ‘’அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் . அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி’’ என்று கூறியிருக்கிறார் திருச்சி சூர்யா சிவா.
இதற்கு, திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, ‘’கேசவ விநாயகத்தின் கதையை முடிக்க திருச்சி சூர்யாவை பயன்படுத்தும் அண்ணாமலை’’ என்று கூறியிருக்கிறார். அவர் மேலும், ‘’அடுத்து யாரு பி.எல்.சந்தோஷ்?’’என்று கேட்கிறார்.