×

அண்ணாமலை ஒரு காமெடி நடிகர் - காங்., எம்பி தாக்கு

 

அண்ணாமலை தன்னை பெரிய புரட்சியாளர் என்று நினைத்துக் கொள்கிறார்.   ஆனால் உண்மையில்  அவரை காமெடி நடிகராகவே மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்  என்று கூறி இருக்கிறார் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் .

மதுரை திருப்பரங்குன்றம் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார் .  அப்பொழுது,  பாஜக தேசிய தலைவர் ஜெ. பி. நட்டா மதுரைக்கு வந்தபோது இரண்டு பொய்களை கூறி இருக்கிறார். அதில் முதல் பொய் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை . இரண்டாவது பொய் விமான நிலையத்தில் விரிவாக்க பணி நின்று விட்டதாக கூறியிருக்கிறார்.  அது முழுவதும் பொய் என்று  கூறியுள்ளார் மாணிக்கம் தாகூர்.

 தொடர்ந்து பேசியவர்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முரணாகவே பேசுகிறார் தப்பான தகவல்களை பேசி வருகிறார்.  அவர் அரசியலில் தன்னை பெரிய புரட்சியாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.  ஆனால் உண்மை என்னவென்றால் மக்கள் அவரை ஒரு நகை காமெடி நடிகராகவே பார்க்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

 மேலும்,  ராகுல் காந்தியின் பாத யாத்திரை  பற்றி சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை பேசி வருகிறார் என்றும் ஆத்திரப்பட்டுள்ளார்.