×

ஓபிஎஸ்-க்கு பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்- அண்ணாமலை

 

ஓ.பி.எஸ்-க்கு பாஜகவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தீர்வு தேடி வந்த சாதாரண ஏழை தாயை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அநாகரிகமாக அடித்துள்ளார். அமைச்சர் செல்லமாக கொட்டினார் என அந்தப் பெண்ணையே சொல்ல வைக்கிறார்கள். சமூகநீதியை பேசிவிட்டு இப்படி அடிப்பதா ? நாளைக்குள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அமைச்சர் வீட்டின் முன் காலவரையற்ற போராட்டத்தை பாஜக நடத்தும். கவர்னர் மாநில அரசுக்கு இடையூறாக இருப்பதாக அமைச்சர் பொன்முடியும் பேசி வருகிறார் இந்தி படித்தால் பானிபூரி தான் விற்க முடியும் என அரசியல் பேசியது யார் ?

கவர்னர் சனாதன தர்மத்தை பேசுவதில் என்ன தவறு ? தமிழ்நாட்டு மண்ணில் முக்கியமான அம்சம் சனாதன தர்மம். கவர்னர் பாஜகவை பற்றி பேசினால் அரசியல் பேசுகிறார் என கூறலாம். இங்கு பலருக்கு சனாதன தர்மம் என்பது பற்றிய புரிதல் இல்லை. சனாதன தர்மத்தில் ஜாதி என்பது எவ்வாறு உள்ளது.. உயர்வு தாழ்வு என்பதை பிரித்து பார்ப்பதில்லை.கவர்னரை தொடர்ந்து கொச்சை படுத்தும் போது தமிழக பாஜக எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறது. இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை.ஓ.பி.எஸ்-க்கு பாஜகவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது” எனக் கூறினார்.