×

’’இவர்கள் விபச்சாரிகளின் பிள்ளைகளா? இதையெல்லாம்  தாங்கும் இதயம்  ஸ்டாலினுக்கு உள்ளதா?’’
 

 

இந்துக்களை சொல்லக்கூடாத வார்த்தையை சொல்லி இருக்கிறார் ஆ. ராசா . அவரின் தலைவர் குடும்பத்துக்கும் இது பொருந்துமா என்பதை அவர் கூற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருந்தார்.   இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  இவர்கள் எல்லாம் என்ன விபச்சாரிகளின் பிள்ளைகளா என்று கேட்டிருக்கிறார்.

 இந்துக்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வசையில் தரக்குறைவாக பேசியதாக திமுக எம்பி ஆர் ஆசாமி மீது குற்றச்சாற்று எழுந்துள்ளது.   இந்துவாக இருக்கின்ற வரையில் நீ சூத்திரன்.  சூத்திரனாக இருக்கின்ற வரையில் நீ விபச்சாரியின் மகன் .  இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன் இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன்.   இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று பேசி இருந்தார் ஆ.ராசா.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,   திமுக எம்பி ராஜா இந்துக்களை சொல்லக்கூடாத கீழ்த்தரமான வார்த்தைகளை கூறி விமர்சித்திருக்கிறார்.  இது நாட்டு மக்களுக்கு பொருந்துமா?  அவரது தலைவர் குடும்பத்துக்கும் பொருந்துமா? என்பதை சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருந்தார்.

 இந்த நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் , பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் ராமேஸ்வரம் தீர்த்தவாரியில் குளித்து சாமி தரிசனம் செய்து கொண்டாரே என்ற கேள்விக்கு,   

 இதை நீங்கள் ஆ ராசாவிடம் தான் கேட்க வேண்டும்.   அது மட்டுமல்லாமல்  ஆக்டிங் முதல்வராக செயல்பட்டு வரும் சபரீசன் ஊர் ஊராக கோவிலுக்கு செல்கிறார்.  துர்கா ஸ்டாலினும் செல்கிறார்.   இதற்கெல்லாம் ஆ.ராசா என்ன சொல்லுவார்?  இவர்களெல்லாம் விபச்சாரிகளின் பிள்ளைகளா என்ன? என்று கேட்டவர்,   எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அறிஞர் அண்ணா சொன்னார்.  இதை எல்லாம் தாங்கும் இதயம் தான் ஸ்டாலின் உள்ளது போலிருக்கிறது என்றார்.