×

யாருக்கு வாக்களிப்போம் என்பதை சொல்ல மக்கள் பயப்படும் முதல் மாநிலம் குஜராத்.. அரவிந்த் கெஜ்ரிவால்
 

 

யாருக்கு வாக்களிப்போம் என்பதை சொல்ல மக்கள் பயப்படும் முதல் மாநிலம் குஜராத் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான சூரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்துக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த எனது கணிப்புகள் உண்மையாகி விட்டன. குஜராத்திலும் அதுதான் நடக்கும். ஆளும் பா.ஜ.க.வை கண்டு மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள். அதனால்தான் எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்க தயங்குகிறார்கள். உங்கள் அனைவருக்கும் முன்னாள் எழுத்துப்பூர்வமாக ஒரு கணிப்பு சொல்ல போகிறேன். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது என்ற கணிப்பை குறித்துக் கொள்ளுங்கள். 

27 ஆண்டு கால தவறான ஆட்சிக்கு பிறகு குஜராத் குடிமக்களுக்கு இவர்களிடமிருந்து (பா.ஜ.க.) நிவாரணம் கிடைக்கும். ஜனவரி 31ம் தேதிக்குள் குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவோம். நான் சும்மா பேசவில்லை. பஞ்சாபில் நாங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அரசு ஊழியர்களின் ஆதரவுதான் முக்கியம் என்று அனைவரையும் கூப்பிய கரங்களுடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த 3 முதல் 4 நாட்களில் ஒவ்வொரு வாக்கையும் ஆம் ஆத்மி கட்சிக்கு அஞ்சல் வாக்குச் சீட்டில் அளிக்குமாறும், கட்சிக்காக பிரச்சாரம் செய்யுமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன். பா.ஜ.க. கொந்தளிப்பில் உள்ளது ஏனெனில் அது தோல்வியை பார்த்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் படத்தில் எங்கும் இல்லை. 27 ஆண்டுகளில் பா.ஜ.க. இவ்வளவு கிளர்ச்சியடைவது இதுவே முதல் முறை. 

நீங்கள் தெருவில் சென்று யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேளுங்கள், ஆம் ஆத்மி அல்லது பா.ஜ.க. என்று சொல்வார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்போம் என்று கூறுபவர்கள் 5 நிமிடங்களுக்கு பிறகு அவர்களும் அவர்களது முழு மொஹல்லாவும் துடைப்பத்திற்கு (ஆம் ஆத்மி சின்னம்) வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை வெளிப்படுத்துவார்கள். மக்களின் எதிர்வினையை பார்க்கும்போது, ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க அனைவரும் பா.ஜ.க.வை விட்டு வெளியேறுவது போல் தெரிகிறது. நாங்கள் பல மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்டோம், ஆனால் யாருக்கு வாக்களிப்போம் என்று அறிவிக்க மக்கள் பயப்படும் முதல் மாநிலம் குஜராத். சாமானியர் பயந்துள்ளனர். இரண்டாவதாக, காங்கிரஸ் வாக்காளர்கள் எங்கும் காணப்படவில்லை, மூன்றாவது பா.ஜ.க. ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக அளவில் வாக்களிக்கப் போகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.