×

டெய்லர் படுகொலை கொடூரமானது... ஆனால் நுபுர் சர்மாவையும் கைது செய்ய வேண்டும்... அசாதுதீன் ஓவைசி

 

ராஜஸ்தான் டெய்லர் படுகொலை கொடூரமானது ஆனால் நுபுர் சர்மாவையும் கைது செய்ய வேண்டும் என அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லராக இருப்பவர் கண்ணையா லால். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், நுபுர் சர்மாவின் புகைப்படத்தை முகநூல் முகப்புப் படமாக வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று இரண்டு இஸ்லாமியர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இது சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தனது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக போபாலின் அசோகா கார்டன் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: உதய்பூர் சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். ஒருவரை கொல்வதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. 

யாராலும் மற்றவர்களை கொல்ல முடியாது. நாம் சட்டத்தை கையில் எடுக்க மாட்டோம். இது ஒரு குற்றம். ஆனால் நுபுர் சர்மாவையும் கைது செய்ய வேண்டும். தையற்காரரின் கொலை கொடூரமானது. அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏ.ஐ.எம்.ஐ.எம்.-ன் நிலையான நிலைப்பாடு அத்தகைய வன்முறையை எதிர்ப்பதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.