×

அசோக் கெலாட்டுக்கு  பார்வை குறைபாடு உள்ளது அல்லது மனநல சிகிச்சை பெற வேண்டும்.. பா.ஜ.க.. எம்.பி. பதிலடி

 

மத்திய அமைச்சர பயனற்றவர் என்று விமர்சித்த அசோக் கெலாட்டுக்கு பார்வை குறைபாடு அல்லது மனநல சிகிச்சை பெற வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. அசோக் பாஜ்பாய் தெரிவித்தார்.


ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் கடந்த சனிக்கிழமையன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், உங்கள் கூட்டங்களுக்கு வராத பயனற்ற (மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்) அமைச்சரை ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று பிரதமரின் ஒரு நாள் கேட்போம் என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை பயனற்றவர் என்று குறிப்பிட்ட அசோக் கெலாட்டுக்கு பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது. 

பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி. அசோக் பாஜ்பாய் இது தொடர்பாக கூறியதாவது: அசோக் கெலாட் மனநல சிகிச்சை பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் (கஜேந்திர சிங் ஷெகாவத்) மிகவும் வயதானவர், குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அளவில் குழாய் நீர் வழங்குவதற்கு உழைத்த மத்திய அமைச்சரின் ஷெகாவத்தின் முதுமையின் தாக்கம் அவரது நடத்தையில் தெரியும். 

அரசாங்கம் எந்த பொறுப்பை ஒப்படைத்தாலும், அந்த பொறுப்பை அவர் மிகுந்த பக்தியுடன் ஆற்றியுள்ளார். பொது வாழ்வில் ஷெகாவத் போன்ற கடின உழைப்பாளிகள் குறைவாகவே இருப்பார்கள் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் அவர் (ஷெகாவத்) பயனற்றவராகவே பார்க்கப்படுகிறார், அப்படியென்றால் அசோக் கெலாட்டிடம் பார்வை குறைபாடு உள்ளது அல்லது அவருக்கு மனநல சிகிச்சை தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.