×

8 மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு! அண்ணாமலை அதிரடி

 

சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் முழுமையாக கலைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய 8 கட்சி மாவட்டங்களை சீரமைக்கும் வகையில் மாவட்டத் தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகின்றன.


புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதன்படி, திருநெல்வேலி - கட்டளை எஸ்.ஜோதி, நாகப்பட்டினம் - டி.வரதராஜன், சென்னை மேற்கு - டி.என்.பாலாஜி, வட சென்னை மேற்கு - மனோகரன், கோயம்புத்தூர் நகர் - ஏ.பி.முருகானந்தம், புதுக்கோட்டை - செல்வம் அழகப்பன், ஈரோடு வடக்கு - எஸ்.எம்.செந்தில் குமார், திருவண்ணாமலை வடக்கு - சி.ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.