பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூகவாதின்னு சொல்லாதீங்க.. அரசியல் வியாபாரின்னு சொல்லுங்க.. பா.ஜ.க.
பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூகவாதின்னு சொல்லாதீங்க, அரசியல் வியாபாரின்னு சொல்லுங்க என பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பீகாரை பற்றி தெரிந்து கொள்ளவதற்காக அக்டோபர் 2ம் தேதி மேற்கு சம்பாரனில் உள்ள மகாத்மா காந்தியின் பிதிஹர்வா ஆசிரமத்திலிருந்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரையை தொடங்க போகிறேன். புதிதாக அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என தெரிவித்தார். பிரசாந்த் கிஷோர் பாத யாத்திரை மேற்கொள்வதை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது.
பிரசாந்த் கிஷோர் பாத யாத்திரை தொடங்குவது குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஹூகும்தேவ் நாராயண் யாதவ் கூறியதாவது: பிரசாந்த் கிஷோரை வியூகவாதி என்று சொல்லாதீர்கள்,அவர் ஒரு அரசியல் வியாபாரி. மக்கள், தொழிலதிபரை இப்படி முக்கியமான முறையில் விவாதிப்பது சரியல்ல. இது ஒரு முக்கிய விஷயம் அல்ல.
அலைந்து தெரிந்து தொழில் நடத்தும் அவர், இந்த நாட்களில் தொழில் எதுவும் கிடைக்காததால், கொஞ்சம் புகழ் பெற புதிய தொழில் தொடங்கினார். அந்த இடத்திலிருந்து தனது பயணத்தை தொடங்குவது சுதந்திரப் போராட்ட வீரரின் பார்வையை பெறும் என்பது அவரது மாயை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.