×

காங்கிரஸ் சர்தார் படேலை திடீரென அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது... பா.ஜ.க. குற்றச்சாட்டு..

 

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தின் பெயரை சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்ற காங்கிரஸின் வாக்குறுதியை குறிப்பிட்டு, சர்தார் படேலை காங்கிரஸ் திடீரென அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை அண்மையில் அந்த கட்சி வெளியிட்டது. அந்த அறிக்கையில், குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தின் பெயரை சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்ற வாக்குறுதியையும் காங்கிரஸ் கொடுத்து இருந்தது. இதனை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் யமல் வியாஸ் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர்கள் நரேந்திர மோடியை அவமதிக்கும்போது, சர்தார் படேல் ஸ்போர்ட்ஸ் என்கிளேவ் 22 மைதானங்கள் கட்டப்படுவதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

அந்த 22 மைதானங்களில் ஒரு மைதானத்துக்கு தான் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேவேளையில் சர்தார் வல்லபாய் படேலைப் பற்றி காங்கிரஸ் பேசும் போது, 1991ம் ஆண்டு வரை அவருக்கு பாரத ரத்னா வழங்குவது பொருத்தமாக தெரியவில்லை. இன்று வரை சர்தா படேலை காங்கிரஸ் கவுரவிக்கவில்லை. இப்போது மோடி ஜி குஜராத்தில் சர்தார் படேலின் உலகின் மிக உயரமான சிலையை உருவாக்கி, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டபோது, காங்கிரஸ் அவரை திடீரென அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறியதாவது:  காங்கிரஸ் கட்சியின் சான்றிதழ் தேவையில்லை. பல தசாப்தங்களாக சர்தார் படேலுக்கு பாரத ரத்னா வழங்குவதில் ஏன் தாமதம் செய்தார்கள் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். உயரமான சர்தார் படேல் மற்றும் சுதந்திர போராட்டத்திற்கான அவரது பங்களிப்புகள் நாட்டை ஒன்றிணைப்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி இருந்ததால் தான்,அவரை குறைமதிப்பிற்கு உட்படுத்த அவர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களை செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.