×

மார்தட்டி கொண்டது ஏன்? நிதியமைச்சர் பிடிஆருக்கு பாஜக கேள்வி

 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக கட்சியினரை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.  அதிமுக .பாஜக. பாமக  கட்சியினர் இந்த தேனீர் விருந்தில் பங்கேற்று இருந்த நிலையில்,   திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.

 இதனால் ஆத்திரமடைந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,    இவர்களெல்லாம் வராததால் டீ செலவு மிச்சம் . ஆளுநர் மாளிகைக்கு டீ செலவு மிச்சம் என்று தெரிவித்திருந்தார்.

 இதற்கு உடனே,   டீ செலவு மிச்சமா? டீசல் செலவுதான் மிச்சம்!   பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் டீசல் செலவு தான் மிச்சம் என்று எங்களால் சொல்ல முடியும்.   தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என்று பயன்படுத்தக்கூடாது ஷானவாஸ் எம்எல்ஏ பதிலடி கொடுத்திருந்தார்.   இதற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,   ‘’இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள்,  ஷானவாஸ்  சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்’’ என்று தெரிவித்திருந்தார்.  

 இதற்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  ‘’துபாய் கண்காட்சியில் பலநூறு கோடி செலவில் இந்திய அரங்கை கட்டமைத்தது மத்திய அரசு தானே? ஏதோ தமிழக அரசு செலவு செய்து முதலீட்டை பெருக்க முயற்சித்தது  போல் மார்தட்டி கொண்டது ஏன்?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.