×

பாகிஸ்தான் பத்திரிகையாளரின் பகீர் தகவல்..  இது தேச துரோகம் இல்லையா? ஹமீது அன்சாரி, காங்கிரஸை தாக்கிய பா.ஜக.

 

இந்தியாவின் முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி முக்கிய தகவல்களை தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூறியதை குறிப்பிட்டு, இது தேச துரோகம் இல்லையா என்று ஹமீது அன்சாரி மற்றும் காங்கிரஸை பா.ஜ.க. கடுமையாக தாக்கியுள்ளது.

பாகிஸ்தானின் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சா பேட்டி ஒன்றில், இந்தியாவின் முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரியின் அழைப்பின் பேரில் பல முறை இந்தியாவுக்கு சென்றேன். ஹமீது அன்சாரி தன்னுடன் மிகவும் முக்கியமான மற்றும் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். நான் அந்த தகவல்களை பாகிஸ்தான் உளவு துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.யிடம் தெரிவித்தேன் என தெரிவித்து இருந்தார். இந்த செய்தி நம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமீது அன்சாரியும், காங்கிரஸூம் நாட்டுக்கு துரோகம் இழைத்து விட்டதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: ஆளும் கட்சி எழுப்பும் கேள்விளுக்கு அப்போதைய துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் காந்தி மேலும் காங்கிரஸ் தலைவர்கள் அமைதியாக இருந்தால் அது அவர்கள் இந்த பாவங்களை ஒப்புக் கொண்டதற்கு சமம். இந்திய மக்கள் உங்களுக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள், நீங்கள் நாட்டுக்கு துரோகம் செய்கிறீர்கள். இது தேச துரோகம் இல்லையா? சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஹமீது அன்சாரி வெளியில் வந்து இதற்கு பதில் சொல்ல வேண்டும். 

2005 முதல் 2011 வரை ஹமீது அன்சாரி தன்னை 5 முறை இந்தியாவுக்கு அழைத்ததாக மிர்சா கூறியுள்ளார். ஐ.எஸ்.ஐ.யுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒருவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதான் காங்கிரஸின் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கொள்கையா?. இது கட்சியின் நச்சு மனப்பான்மை. பயங்கரவாதத்தை வேரறுக்க எங்கள் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மறுபுறம் இது காங்கிரஸின் மனநிலை. பாகிஸ்தானின் பத்திரிகையாளர்களுக்கு விதிமுறைக்கு புறம்பாக 3 நகரங்களுக்கு பதிலாக 7 நகரங்களுக்கு செல்ல விசா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.