×

காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா ஆகியவை ஊழலின் 4 தூண்கள்..  ஷெசாத் பூனவல்லா தாக்கு

 

காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா ஆகியவை ஊழலின் 4 தூண்கள் என்று பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா என தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் அனைவரும் ஜனநாயகத்தின் நான்கு  தூண்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது நாம் ஊழலின் நான்கு தூண்களை பற்றி கற்றுக்கொள்கிறோம்.  காங்கிரஸ்- அவர்களின் தத்துவம் எனக்கு ஊழல் வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ்- அதிக ஊழல். மூன்றாவதாக அது (மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர்) உத்தவின் (சிவ சேனா பிரிவு) ஊழல் கட்சி. நான்காவது கட்சி ஆம் ஆத்மி.

தற்போது நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனைகளை (நேஷனல் ஹெரால்டு ஹவுஸில் சோதனை), ஆளும் கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அமைதிப்படுத்தும் முயற்சி என்று ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஒரு குடும்பத்தின் பாக்கெட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கண்காணிப்பில்தான் இது நடந்தது. காங்கிரஸ் கட்சிக்கும், ஜெய்ராம் ரமேஷுக்கும் உச்ச நீதிமன்றமோ அல்லது எந்த உயர் நீதிமன்றமோ நிவாரணம் வழங்கவில்லை. எனவே நீதிமன்றமும் உடந்தையாக உள்ளதா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.