×

காத்து எங்க பக்கம் அடிக்குது;  தமிழகத்தில் 39தொகுதியிலும் பாஜக வெல்லும் - அண்ணாமலை சரவெடி

 

உபியில் பாஜக ஜெயித்தால் கங்கையில் குதித்தி விடுவேன் என்று சொன்னார் ஒரு ஜர்னலிஸ்ட். எந்த ஏஸி ரூம்ல உட்கார்ந்து என்ன யோசிக்கிறார்கள்.  கள நிலவரம் மாறிவிட்டது, மக்கள் பாஜகவின் ஆளுமையை விரும்புகிறார்கள், தமிழகத்தில் 39தொகுதியிலும் பாஜக வெல்லும் என்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் டெல்லி செல்வார்கள் என்று அண்ணாமலை தொடர்ந்து சொல்லி வருகிறார். இது நடக்கும் காரியமா என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால்,  25 அல்ல 39 பாஜக எம்பிக்கள் டெல்லி செல்வார்கள் என்கிறார்.

இது குறித்து பேசியிருக்கும் அண்ணாமலை,  ‘’குஜராத்தில் அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்று எழுதுறாங்க.  ஆனா, இதுவரைக்கும் ஜெயிச்சதோட 10 சீட் அதிகமா பாஜக ஜெயிக்கும்.  இமாச்சல பிரதேசத்தில் எந்த ஒரு அரசுமே திரும்ப வராது என்று சொல்லுவாங்க.  ஆனா இந்த முறை பாஜக அங்கே வரப்போகுது.   அப்ப கிரவுண்ட் லெவல்ல வேற எதோ நடக்குது.  நியூயார்க் டைம்ஸ் வேற ஏதோ எழுதுறான்.  வாசிங்டன் போஸ்ட் வேற ஏதோ எழுதுறான்.  இங்க டிவி ஸ்டூடியோவுல உட்கார்ந்து இவங்க வேற ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்க.  

பாஜக மைனாரிட்டிக்கு எதிரான கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் மணிப்பூரில் கிறிஸ்துவர்களாதான் அதிகம்.  அவர்கள் பாஜகவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோவாவிலும் அப்படித்தான்.  

நாங்க கிரவுட்ல பார்க்குறோம்.  அவுங்க ஏசி ரூம்ல உட்கார்ந்து என்னத்தை யோசிக்கிறாங்க.  என்னை ஒருவர் கேட்டார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 25 எம்பிக்கள் வருவார்கள் என்று சொல்றீங்களே? இது கொஞ்சம் அதிகமா தெரியலையா? என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன்.  நான் 39 என்றுதான் சொல்லவேண்டும். ஆனா அதை கேட்க நீங்க இன்னும் தயாராக இல்லை.  காத்து எந்த பக்கம் அடிக்குது என்று கிரவுண்ட்ல நின்னாதான் தெரியும்’’என்று அழுத்தமாகச் சொல்கிறார்.