×

இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே அதிக ஊழல் செய்த ஒரு குடும்பம் இருந்தால் அது காந்தி குடும்பம்தான்.. பா.ஜ.க. பதிலடி

 

இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே அதிக ஊழல் செய்த ஒரு குடும்பம் இருந்தால் அது காந்தி குடும்பம்தான் என பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்தார்.

நேஷனல்  ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,  மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடியை கடுமையாக சாடினர். சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்திக்கு எதிராக நரேந்திர மோடி கோழைத்தனமான சதித்திட்டம் தீட்டியாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா பதிலடி கொடுத்துள்ளார். 

கவுரவ் பாட்டியா கூறியதாவது: ஊழல் மக்கள் பயந்து சட்டத்தின் முன் தலைவணங்க வேண்டும் மற்றும் அரசியல் பழிவாங்கும் குற்றச்சாட்டை நிராகரிக்க வேண்டும். எந்தவொரு உயர் நீதிமன்றமும் அல்லது உச்ச நீதிமன்றமும் இது போன்ற காரணத்திற்காக ஊழல் வழக்கில் எந்த நடவடிக்கைகளையும் ரத்து செய்யவில்லை. சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி யாரும் சட்டத்துக்கு அப்பாற்றப்பட்டவர்கள் அல்ல. இது (சட்டம்) அனைவருக்கும் சமமாக பொருந்தும். சோனியா காந்தி மற்றும் ராகுல் இருவரும் ஊழல் வழக்கில் (நேஷனல் ஹெரால்டு வழக்கு) ஜாமீனில் உள்ளனர் என்பதை காங்கிரஸ் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். 

சோனியா காந்தியின் மருமன் ராபர்ட் வதேராவும் நில பேர ஊழல் வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே அதிக ஊழல் செய்த ஒரு குடும்பம் இருந்தால் அது காந்தி குடும்பம்தான். அவர்களை (காந்தி குடும்பம்) மக்கள் நம்பிக்கையுடன் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் நாட்டை கொள்ளையடிக்க முயன்றனர். எந்த நீதிமன்றமும் அவர்களுக்கு (சோனியா காந்தி குடும்பம்) எதிரான எந்த வழக்கையும் ரத்து செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.