×

மம்தா பானர்ஜி அஜ்மீர் ஷெரீப் சென்றது ஒரு நல்ல செயல், ஆனால் பாவங்களை கழுவ புஷ்கர் சரோவரில் குளித்திருக்க வேண்டும்.. பீமன் போஸ்

 

மம்தா பானர்ஜி ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் சென்று சாதர் வழங்கினார். இது ஒரு நல்ல செயல், ஆனால் பாவங்களை கழுவ புஷ்கர் சரோவரில் குளித்திருக்க வேண்டும் என்று பீமன் போஸ் விமர்சனம் செய்தார்.

இந்தியாவின் ஜி20 தலைமை தொடர்பாக கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அதன் பிறகு மம்தா பானர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமையன்று ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப்புக்கு சென்றார். குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்காவில் சதர் வழங்கினார். புஷ்கரில் உ்ளள பிரம்மா கோயில் மற்றும் காட் சென்று பிரார்த்தனை செய்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஜ்மீர் ஷெரீப்புக்கு சென்றதை இடது முன்னணி விமர்சனம் செய்துள்ளது. இடது முன்னணி தலைவர் பீமன் போஸ் கூறியதாவது: மம்தா பானர்ஜி ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் சென்று சாதர் வழங்கினார். இது ஒரு நல்ல செயல், ஆனால் பாவங்களை கழுவ புஷ்கர் சரோவரில் குளித்திருக்க வேண்டும்.

மம்தா பானர்ஜி புஷ்கர் சரோவரிலும் குளித்திருக்க வேண்டும். அவள் (மம்தா பானர்ஜி) எவ்வளவு பாவம் செய்தாள், அதை கழுவ குளித்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியையும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.