வெடித்த சசிகலா - தெறித்து ஓடிய டோல்கேட் ஊழியர்கள்
பழிவாங்குறீங்களா என்று சசிகலா கொதித்தெழுந்த போது அந்த நள்ளிரவிலும் அந்த ஏரியா பதற்றம் அடைந்திருக்கிறது. சம்பந்தப்பட்டவர் வந்து மன்னிப்பு கேட்கும் வரைக்கும் நகரமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். அதேபோல் அந்த நபர் வந்து மன்னிப்பு கேட்ட பின்னர் தான் அவர் அங்கிருந்து சென்றிருக்கிறார் சசிகலா.
அதிமுகவில் தனது பலத்தை நிரூபிக்க பயணங்கள் மேற்கொண்டு தொண்டர்களின் ஆதரவை திரட்டி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று இரவு 11:45 மணிக்கு விழுப்புரத்திலிருந்து தஞ்சை செல்வதற்காக திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சென்று இருக்கிறார் . துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. சசிகலாவின் காருக்கு முன்னாலும் பின்னாலும் நான்கு ஐந்து கார்கள் அணிவகுத்து சென்றிருக்கின்றன. சசிகலாவின் காருக்கு முன்னால் சென்ற கார் ஸ்கேன் செய்யப்பட்டு சென்றதும், சசிகலாவின் கார் சென்று இருக்கிறது. அப்போது சசிகலாவின் கார் கண்ணாடியில். சுங்கச்சாவடியின் ஸ்கேன் தடுப்பு கட்டை தட்டி இடித்திருக்கிறது.
இதனால் சசிகலா தனது காரை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி இருக்கிறார். இதற்குள் அவரது ஆதரவாளர்கள் சுங்க சுங்கச்சாவடியின் கட்டண நுழைவு வாயில்களில் அங்கங்கே கார்களை அடுத்தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். எங்கே, தங்களை தாக்கி விடுவார்களோ என்று பயந்துபோன சுங்கச்சாவடி ஊழியர்கள் ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள்.
சசிகலாவின் ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட, சசிகலா காரில் அமர்ந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டார். சுங்கச்சாவடி மேலாளர் உடனே இங்கு வரவேண்டும். நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் . இது முதல் முறை அல்ல இது தனக்கு மூணாவது முறையாக நடக்குது. இதே துவாக்குடி சுங்கச்சாவடியில் இது மூன்றாவது முறையாக தனக்கு நடக்கிறது. பழி வாங்கும் நோக்கில் தான் இப்படி செய்கிறார்கள் என்று அவர் ஆவேமடைந்திருக்கிறார்.
இதை எடுத்து சசிகலா ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி ஊழியஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனாலும் சுங்கச்சாவடி மேலாளர் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் இங்கிருந்து நகர மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்க, இதற்குள் தகவல் கிடைத்து திருவரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் சுங்கச்சாவடி மேலாளர் தான் வரவேண்டும் என்று சசிகலா தரப்பினர் சொல்ல சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று சர்ச்சை வார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார் .
அதன் பின்னர், நடந்த சம்பவத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் போலீசாரும் நடந்த பிரச்சனை குறித்து நீங்கள் எழுதப்பூர்வமாக புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சசிகலா தரப்பிடம் சொல்ல அதற்கு ஒப்புக்கொண்ட சசிகலா அங்கிருந்து சென்றிருக்கிறார்.
சசிகலா தனது ஆதரவாளர்களுடன் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் துவாக்குடி சுங்கச்சாவடியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.