×

ஓபிஎஸ் டீக்கடைக்காரர்! ஜெயலலிதாவுக்கு செருப்பு மாலை போட்டவர்- சிவி சண்முகம்

 

யார் இந்த ஓ.பி.எஸ்? டீ கடை வைந்திருந்தவர் தான் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் 51  ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் வானூர் அதிமுக எம்.எல்.ஏ சக்கரப்பாணி தலைமையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய சி.வி.சண்முகம் பேசுகையில், “யார் இந்த ஓ.பி எஸ்? டீ கடை வைத்திருந்தவரை  அடையாளம் காட்டியவர் அம்மா, நான் எம்.எல்.ஏ-வாக இருக்கும் போது தான் ஓ.பி.எஸ். எம்.எல் ஏ, நான் அமைச்சராக இருந்தபோது தான் அவரும் அமைச்சர், அவர் பதவிக்கு வரும்போது நான் நானும் பதவிக்கு வந்துவிட்டேன்.

இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்றை சொல்றேன், ஏற்கனவே அம்மா படத்திற்கு செருப்பு மாலை போட்டவர் தான் இந்த ஓ.பி.எஸ். ஆண்மை இருந்தால் ஓ.பி.எஸ் தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தை நடத்த சொல்லுங்கள் பார்க்கலாம். பதவி வெறி பிடித்தவர், சின்னத்தை முடக்கிய கயவன் தான் ஓ.பி.எஸ். ஓ.பி.எஸ் அவர்களே சரித்தரத்தை நினைத்து பாருங்கள்” என்று காட்டமாக பேசினார்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்  சி.வி.சண்முகத்தை மேடைக்கு அழைத்து வருவதில் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் மற்றும் அதிமுக நகர இளைஞர் பாசறை செயலாளர் அன்பரசன் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் சி.வி.சண்முகம் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். நாற்காலியை தூக்கியும் சண்டை போட்டுக்கொண்டனர்.