சிபிசிஐடி போலீசாரிடம் சி.வி.சண்முகம் வாக்குமூலம் - விரைவில் விசாரணை  அறிக்கை
 

 
cv

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்திற்கு பின்னர் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மோதல் நடந்தது.    ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கி கொண்டார்கள்.  பெரிய கலவரத்திற்கு பின்னர் அலுவலகத்தின் கதவை உடைத்து கொண்டு ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றார் ஓபிஎஸ்.

 இது குறித்து  அதிமுக எம்பிசி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.   இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு  மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அதிமுக அலுவலக மோதல் வழக்கு குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

o

 அதிமுக அலுவலகத்திற்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார்,  அங்கிருந்த பல்வேறு தடயங்களை சேகரித்துள்ளனர்.  மோதல் சம்பவம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.  இதை வைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டுள்ளார்கள்.

 இது குறித்து புகார் தாரரான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் வாக்குமூலம் பெற சிபிசிஐடி போலீஸ் சார் முடிவு செய்தனர்.  இதை  அடுத்து சென்னையில் எம் ஆ.ர் சி. நகரில் இருக்கும் சிவி சண்முகத்தின் அலுவலகத்திற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் நேரில் சென்றார்கள்.  மோதல் தொடர்பாக பல்வேறு தகவல்களை முழுமையாக சேகரித்துள்ளனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.  அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது பற்றியும் அப்போது ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்தும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

 சிவி சண்முகம் அளித்திருந்த புகாரில் யார் யார் சதி திட்டத்துடன் அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்தார்கள் என்பது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.  இது குறித்து சிபிசிஐடி போலீசார் சி.பி சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  அப்போது சிபிசிஐடி போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சி.வி சண்முகம் விரிவான பதிலை வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.  

 ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் மோது மோதலில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியது பற்றியும்,  மோதலில் யார் யாருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பது பற்றியும் சிவி சண்முகம் கூறியிருக்கிறார்.  இதன் அடிப்படையில் தான் சிபிசிஐடி போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்கள்.   இதுவரைக்கும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. 

 கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமை கழக மேலாளர் ஆன மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீஸ்  விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள்.  அவரிடம் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றுள்ளார்கள்.  சிவி சண்முகத்துடன் விசாரணை நடத்தி வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளார்கள் . இதை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தி திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதிமுக அலுவலக மோதல் வழக்கு இன்னும் சில தினங்களில் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.  இதை அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை வேகப்படுத்தி இருக்கின்றார்கள்.   விரைவில் விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐ போலீசார் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.