×

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு - சிறப்பு கோர்ட் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட்
 

 

 அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.  அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் அவருக்கு எதிரான வழக்கு ஆவணத்தை அமலாக்கத் துறைக்கு தரமறுத்த சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்துள்ளது
சென்னை உயர்நீதிமன்றம்.  

  கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.   அப்போது அவர் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி கொண்டு மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.  

 இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்திருந்தது.   சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வந்தது.   விசாரணைக்காக ஆவணங்களை வழங்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 உடனே இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.   இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு வழக்கு ஆவணத்தை அமலாக்கத்துறை தர மறுத்த சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.   ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் நகல் வழங்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.