×

ஓபிஎஸ் -இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பான மூத்த நிர்வாகி

 

 அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.   முன்னதாக இந்தக் கூட்டம் குறித்து ஆலோசனை நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.   இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முக்கிய ஆலோசனைகள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக கூட்டத்திற்கு வரும் அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.   இது கட்சியின் சீனியர்கள் சிலரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.   இந்த கட்டுப்பாட்டால் கடுப்பான முன்னாள் அதிமுக எம்பி கூட்டத்தை புறக்கணித்து சென்றிருக்கிறார்.

 சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,   இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது .  அனைத்து மாவட்ட செயலாளர்கள் , கட்சியின் மூத்த நிர்வாகிகள் என்று பலரும் இந்த கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர் .  

அதிமுக ஆலோசனைக் கூட்டங்களில் நடைபெறும் விவாதங்கள், காரசார விவாதங்கள் , ஆலோசனைகள் உடனுக்குடன் வெளியே ஊடகங்களுக்கு கசிந்து விடுகின்றன. அண்மையில் அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய பொன்னையன் பேச்சு வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதற்கெல்லாம் காரணம் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார் செல்போனை ஆன் செய்து வைத்துவிட்டு உட்கார்ந்து விடுகிறார்.  அதிலிருந்து லைவ்வாக  ஊடகத்தினர் கேட்டு உடனுக்குடன் செய்திகள் கசிந்து விடுகிறது என்பதை அறிந்த தலைமை,   செல்போனுக்கு தடை விதித்திருக்கிறது .

அதனால் அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு யாரும் செல்போன் எடுத்து கொண்டு உள்ளே வர கூடாது என்று தடை விதிக்க,  இதற்கு  சிலர் ஒத்துழைப்பு கொடுத்தாலும்   சிலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  குறிப்பாக முன்னாள் எம்பி மைத்ரேயன் செல்போனுடன் உள்ளே செல்ல,  செல்போன் பேச அனுமதி மறுப்பு என்று சொல்ல , அவர் கொடுத்த கடுப்பாகி, நான்  இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று சொல்லிவிட்டு புறக்கணித்து திரும்பிச் சென்றிருக்கிறார்.  

 செயற்குழு, பொதுக்குழுவில் செல்போன் பயன்படுத்தகூடாது என்பது  உண்மைதான்.  அதற்காக மாட்ட செயலாளர்கள் கூட்டத்திலுமா இந்த கெடுபிடி இருக்க வேண்டும் என்று டென்ஷனில் இருக்கிறார்களாம்.  ஆனால்,  கட்சியின் ஆலோசனைகள் , காரசார விவாதங்கள் உடனுக்குடன் வெளியே கசிந்து விடுவதால் தலைமை இந்த அதிரடி முடிவில் இருந்து பின்வாங்கவில்லையாம்.