×

ஸ்டாலின் -சிதம்பரம் :திருச்சி திமுக திகுதிகு

 

 முதல்வர் ஸ்டாலின் ப. சிதம்பரம் நேரில் சந்தித்துப் பேசியதை அடுத்து திருச்சி திமுக திகுதிகுவென்று இருக்கிறது.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் அதிமுக 49 இடங்களை கைப்பற்றி இருக்கிறது.   போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. 

 இந்த நிலையில்   மலைக்கோட்டை மதிவாணன் என்பவரை திருச்சி மேயர் ஆக்கிவிட வேண்டும் என்று அன்பில் மகேஷ் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.  ஆனால் சீனியர் நேரு என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய் என்று ஸ்டாலின் போட்ட உத்தரவால்,  தனது முயற்சியை மாற்றிக்கொண்ட அன்பில்,   மதிவாணனுக்கு மேயர் பதவி எதிர்பார்த்திருந்தவர்,  தற்போது  துணை மேயர் பதவியை எதிர்பார்த்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார்.

நேருவின் தீவிர ஆதரவாளரான அன்பழகன் தான் திருச்சி மேயராக பதவி ஏற்பார் என்ற பேச்சு இருக்கிறது.   இதற்கிடையில் ஸ்டாலினை சந்தித்த சிதம்பரம் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலம் ஜூலை 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பதால்  அது குறித்து ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்.

 அப்போது திருச்சியில்  போட்டியிட்டு 5 வார்டுகளிலும் காங்கிரஸ் வென்று விட்டது என்பதை சொன்ன சிதம்பரம்,  அந்த  வெற்றி பெற்றவர்களில் ஒருவர் சுஜாதா,  சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பதால், அவருக்கு திருச்சியின் துணை மேயர் பதவியை வழங்க வேண்டும்  ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த தகவல் திருச்சி திமுகவில்  பரவ,   அன்பில் மகேஷ் -அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் கோபம்.   மேயர் பதவியை எதிர்பார்த்து வேண்டாம் என்றுதான் துணை மேயர் பதவியை எதிர்பார்த்து இருக்கிறோம்.   அப்படி இருக்கும்போது  சிதம்பரம் எதார்த்தமாக சென்று கேட்டிருக்கிறாரா?  இல்லை தனது  செல்வாக்கு உயர்கிறது என்று நினைத்து,  நேருவே சிதம்பரத்தை பேசச்சொல்லி  பிரச்சனை செய்கிறாரா  என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது அன்பிலுக்க்கு.   இதனால் திருச்சி திமுக திகுதிகுவென்று இருக்கிறது.