×

காங். கூட்டத்தில் அடிதடி - நாற்காலி வீச்சு

 

அடிதடி, நாற்காலி வீச்சு நடந்ததால் காங்கிரஸ் கூட்டத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது .  தூத்துக்குடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தான் இத்தனை களேபரம்  நடந்து இருக்கிறது .

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்துள்ளது .  இக்கூட்டத்தில் பேசிய மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ. பி. சி. வி சண்முகம் ,   காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசினால் மட்டும் போதாது.  கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 உடனே மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவரும்,  மாநில பொதுக் குழு உறுப்பினருமான முத்து விஜயா எழுந்து,    தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தீர்கள்?  ஒரே வார்டில் திமுகவும் போட்டியிட்டது.  காங்கிரசும் போட்டியிட்டது.  இதை ஏன் நீங்கள் பேசி முடிக்கல? இப்படி இருந்தா கட்சி எப்படி பலப்படும்? என்று சொல்ல,   34 வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் குறிப்பிட்டு பேச முயன்றிருக்கிறார்.

 இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  கூச்சல் குழப்பம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உண்டாயிருக்கிறது.  கடைசியில் கைகலப்பு ஏற்பட்டதால் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டு இருக்கின்றன .

இதை அடுத்து முத்து விஜயா கூட்டத்திலிருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி இருக்கிறார்.  இதனால் தூத்துக்குடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமும் நிலவி இருக்கிறது.