திருக்காக்கரா தொகுதி இடைத்தேர்தலில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.. காங்கிரஸ் எம்.பி.
கேரளாவில் திருக்காக்கரா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என காங்கிரஸ் எம்.பி. கே.முரளீதரன் நம்பிக்கை தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருக்காக்கரா சட்டப்பேரவை தொகுதிக்கும் இம்மாதம் 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என காங்கிரஸ் எம்.பி. கே.முரளீதரன் நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. கே.முரளீதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எங்கள் நம்பிக்கைகள் ஒருபோதும் வீண் போகவில்லை.
திருக்காக்கரா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெறுவோம். இறுதியில் வெற்றி நமதே. தோற்று போகிறவர்கள் ரிசல்ட் வரும் வரை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அரசுக்கு எதிராக வாக்குகள் சிதறாது. காங்கிரஸ் என்று சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.ஆனால் அவர் (கே.வி. தாமஸ்) நம்மிடையே இல்லை.
காங்கிரசில் இருக்கும்போது அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும். அவர்கள் கட்சியை விட்டு வெளியேறும்போது அந்த அதிகாரம் இல்லாமல் போய் விடுகிறது. ஜூன் 3ம் தேதி (சட்டப்பேரவை இடைத்தேர்தல் எண்ணிக்கை) இறுதிக்குள் யாரும் வாங்காத சரக்காக பலர் மாறி விடுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.